இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய அதிகாரிகள் 3 பேர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான ஒழுக்காற்று விசாரணை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய பிரதான முகாமையாளர் ஒருவரும், பாதுகாப்பு தொடர்பான உயரதிகாரியொருவரும் மற்றும் கிளிநொச்சி சாலையிலுள்ள ஒரு அதிகாரியும் இடைநிறுத்தப்படவுள்ளதாக தெரிய வருகிறது.
அவர்களை இடைநிறுத்தும் கடிதம், இ.போ.ச தலைமையலுவலகத்திலிருந்து, வடபிராந்திய தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனினும், உயரதிகாரிகள் விடுமுறை பெற்று சென்றுள்ளதால், அவர்களிற்கான இடைநிறுத்தல் கடிதம் நேற்று நேரில் கையளிக்கப்படவில்லை. தபால் மூலமாக அவர்களிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
2019ஆம் ஆண்டு முறையற்ற தினவரவு பதிவேட்டின் அடிப்படையின் சம்பளம்,மேலதிக கொடுப்பனவை ஒருவர் பெற்றதாகவும், அதற்கு துணை போனதாக இருவர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர்கள் பணியிலிருந்து இடைநிறுத்தப்படுவதுடன், குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.