திருகோணமலை தலைமையக கடற்படை முகாமில் தூக்கில் தொங்கிய நிலையில் கடற்படை சிப்பாய் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று (19) அதிகாலை இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் கடற்படை சிப்பாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட கடற்படை சிப்பாய் நவ வத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த என்.எம்.கே.எஸ்.நவரத்ன (26) எனவும் தெரியவந்துள்ளது.
கடற்படை சிப்பாய் தூக்கில் தொங்கி இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
திருகோணமலை கடற்படை முகாம் வைத்தியசாலையிலிருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக சடலம் கொண்டு செல்லப்பட உள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை திருகோணமலை துறைமுக போலீசார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1