இலங்கைக்கு கடத்தும் நோக்கில் கார்களில் ஏற்றிவரப்பட்ட கஞ்சாவை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
நாகப்பட்டினம், கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் பொலிசார் நடத்திய சுற்றிவளைப்பில் 2 கார்களில் ஏற்றிவரப்பட்ட 167 கிலோகிராம் கெரள கஞ்சாவே மீட்கப்பட்டது.
கஞ்சாவை கொண்டு வந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர். வேதாரணியத்தை சேர்ந்த சுதாகர் (40), பிரபாகரன் (27), சுதன்ராஜ் (27), திருவனந்தபுரத்தை சேர்ந்த உத்தப்பா (47), சிந்துராஜ் (35), அக்ஷய் (24), அனீஸ்குமார் (38), விசாகப்பட்டினத்தை சேர்ந்த நாகராஜ் (22), அனில் (25) ஆகியோரே கைது செய்யப்பட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1