அமெரிக்காவின், டெக்சாஸ் ஜெப ஆலயத்திற்குள் 10 மணிநேர முற்றுகையின் போது நான்கு பேரை பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
அவர், 44 வயதான பிரிட்டன் நபர். லங்காஷையரின் பிளாக்பர்ன் பகுதியைச் சேர்ந்த மாலிக் பைசல் அக்ரம் என்பவரே இந்த பயங்கரவாத செயலில் ஈடுபட்டார். பயங்கரவாத குற்றப் பதிவுடைய அவர், அமெரிக்காவிற்கு எப்படி அனுமதிக்கப்பட்டார் என்ற பலத்த கேள்வி எழுந்துள்ளது.
அவருடன் தொடர்பிலிருந்த இரண்டு இளையவர்கள், பிரிட்டனின் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். சட்ட காரணங்களுக்காக அவர்களின் அடையாளம் வெளிப்படுத்தப்படவில்லை.
இதையடுத்து, எஃப்.பி.ஐ. அதிரடி படையினர் பெத் இஸ்ரேல் வழிபாட்டு தலத்தை சுற்றி வளைத்தனர். பணயக்கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமானால், டெக்சாஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் பெண் பயங்கரவாதி ஆபியா சித்திக்கை விடுதலை செய்ய வேண்டும் என மாலிக் பைசல் அக்ரம் வலியுறுத்தினார்.
10 மணி நேரத்திற்கும் மேலாக ஒரு மதகுரு உள்ளிட்ட 4 பணயக்கைதிகளை வைத்திருந்த பின்னர் FBI இன் உயரடுக்கு பணயக்கைதிகள் மீட்புக் குழுவால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பணயக்கைதிகளை பிடித்து வைத்திருந்த போது, அந்த ஆலயத்தின் பேஸ்புக் நேரலையில் மாலிக் பைசல் அக்ரம் பேசிக்கொண்டிருந்தார். அப்போதுதான், ஆபியா சித்திக்கை விடுவிக்க வேண்டுமென குறிப்பிட்டார்.
பின்னர், எவ்.பி.ஐ இன் ஸ்வாட் குழுவினரையும் எச்சரித்தார். ‘யாராவது இந்தக் கட்டிடத்திற்குள் நுழைய முயன்றால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்… அனைவரும் இறந்துவிடுவார்கள்.’
மதியம் 2 மணிக்கு நேரலை துண்டிக்கப்படுவதற்கு முன்பு, அவர் பிரிட்டிஷ் உச்சரிப்பில், ‘நான் சாகப் போகிறேன்’ என்று கூறுவதைக் கேட்க முடிந்தது. என்னை நினைத்து அழாதே’
‘நீங்கள் கேட்கிறீர்களா? நான் சாகப் போகிறேன்’ என்று திரும்பத் திரும்பச் சொன்னார்.

ஜெப ஆலயத்திற்குள் பணயக்கைதிகளை அக்ரம் பிடித்த பின்னர், முதலில் ஒரு பணயக்கைதியை விடுதலை செய்துள்ளார். ஆனால், எஞ்சிய 3 பிணைக்கைதிகளை விடுதலை செய்யவில்லை. இதனை தொடர்ந்து எப்பிஐ பொலிசாரின் சிறப்புப் படைப்பிரிவான ஸ்வாட் குழுவினர் பிணைக்கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெத் இஸ்ரேல் மத வழிபாட்டுத்தளத்திற்குள் அதிரடியாக நுழைந்தனர்.
அங்கு பயங்கரவாதியை கண் இமைக்கும் நேரத்தில் சுட்டுக்கொன்றனர். அதன் பின்னர் பிணைக்கைதிகளாக இருந்த எஞ்சிய 3 யூதர்களையும் ஸ்டாவ் பிரிவினர் மீட்டனர்.
இந்நிலையில், பிணைக்கைதிகளை பிடித்து வைத்திருந்த பயங்கரவாதி யார்? என்ற் அதகவல் தற்போது வெளியாகியுள்ளது.
முதலில், ஆபியா சித்திக்கின் சகோதரனான முகமது சித்திக்கே இந்த பயங்கரவாத செயலில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த பயங்கரவாத செயலுக்கும் முகமது சித்திக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவரது சட்டத்தரணி தெரிவித்தார்.
இந்த நிலையில், பிணைக்கைதிகளை பிடித்து வைத்திருந்தது இங்கிலாந்தை சேர்ந்த பயங்கரவாதி என தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டனை சேர்ந்த மாலிக் பைசல் அக்ரம் என்ற 44 வயது நபரே இந்த பயங்கரவாத செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அவருக்கு பயங்கரவாத குற்றப்பதிவு உள்ளதை, அவரது சகோதரர் வெளிப்படுத்தியுள்ளார்.
பயங்கரவாத குற்றப்பதிவுடைய அவர் எவ்வாறு அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டார் என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
சகோதரர் குல்பர் அக்ரம் சமூக ஊடகங்களில் ஒரு செய்தியைப் பகிர்ந்துள்ளார், அதில் அவர் FBI உடன் பணிபுரிந்ததாகவும், சண்டையின் போது தனது உடன்பிறந்தோருடன் ‘தொடர்பு கொள்வதாகவும்’ வெளிப்படுத்தினார். மாலிக்கின் செயல்களுக்கு ‘மனநலப் பிரச்சினைகள்’ இருப்பதாகவும் அவர் மன்னிப்பு கேட்டார்.
அவரது பேஸ்புக் பதிவில் “மிகவும் சோகத்துடன், இன்று காலை அமெரிக்காவின் டெக்சாஸில் எனது சகோதரர் பைசல் காலமானதை உறுதிப்படுத்துகிறேன். ஒரு குடும்பமாக நாங்கள் முற்றிலும் அழிந்துவிட்டோம். FBI விசாரணை நடந்து கொண்டிருப்பதால் இப்போது அதிகம் சொல்ல முடியாது.
ஒரு குடும்பமாக நாங்கள் அவருடைய எந்த செயலையும் மன்னிக்கவில்லை என்பதையும், துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களிடமும் முழு மனதுடன் மன்னிப்பு கேட்க விரும்புகிறோம் என்பதையும் நாங்கள் கூற விரும்புகிறோம்.
கிரீன்பேங்கில் நேற்று இரவு முழுவதும் சம்பவ அறையில் அமர்ந்து அதிகாலை வரை பைசல், பேரம் பேசுபவர்கள், எஃப்.பி.ஐ போன்றவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தேன். மேலும் எனது சகோதரர் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர் பணயக்கைதிகளுக்கு தீங்கு விளைவிக்க மாட்டார் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம்.
அவரை சரணடையச் செய்யும்படி நாங்கள் அவரிடம் எதுவும் சொல்லவோ அல்லது செய்திருக்கவோ முடியாது.

யூதர், கிறிஸ்தவர்கள் அல்லது முஸ்லீம்கள் என எந்த ஒரு மனிதர் மீதும் தாக்குதல் நடத்தினால் அது தவறானது, எப்போதும் கண்டிக்கப்பட வேண்டும் என்பதையும் சேர்த்துக் கொள்ள விரும்புகிறோம். ஒரு முஸ்லீம் ஒரு யூதரை தாக்குவது அல்லது எந்த யூதர் ஒரு முஸ்லீம், கிறிஸ்தவர், ஹிந்து போன்றவர்களைத் தாக்குவது முற்றிலும் மன்னிக்க முடியாதது” என தெரிவித்துள்ளார்.
மாலிக் இங்கிலாந்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் அமெரிக்காவுக்கு வந்தது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவிற்குள் நுழைந்த மாலிக், தனது முதலாவது இரவை வீடற்றவர்களிற்கான தங்குமிடத்தில் கழித்ததாகவும், பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை வாங்கியதாகவும் அமெரிக்க ஜனாதிபதி பைடன் தெரிவித்துள்ளார்.
யார் இந்த ஆபியா சித்தி?
அமெரிக்காவின் டெக்சாஸ் சிறையிலுள்ள ஆபியா சித்திக்கை விடுவிக்க கோரியே, மாலிக் பணயக்கைதிகளை பிடித்து வைத்திருந்தார்.
ஆபியா சித்திக் தற்போது அமெரிக்க சிறையில் உள்ளார். அவர் கைது செய்யப்பட்ட சமயத்தில், எவ்.பி.ஐயினால் தேடப்பட்ட முதன்மையான பெண்ணாக அவர் இருந்தார்.
ஆபியா சித்திக் ‘பெண் அல்கொய்தா’ என்று அழைக்கப்பட்டார்.
தற்போது 49 வயதாகும் ஆபியா சித்திக், 2008 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவ கப்டனை கொலை செய்ய முயன்ற வழக்கில் 86 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.
பாகிஸ்தானில் பிறந்த நரம்பியல் விஞ்ஞானியான அவர் இரண்டு கிலோ விஷம் சோடியம் சயனைடு மூலம் நியூயோர்க்கின் புரூக்ளின் பாலம் மற்றும் எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் மீது இரசாயனத் தாக்குதல்களுக்கு திட்டமிட்டிருந்தார்என்றும் எவ்.பி.ஐயினால் குற்றம்சாட்டப்பட்டது.
அமெரிக்கா மீதான அவரது வெறுப்பு மிகவும் வலுவாக இருந்தது. விசாரணையின் போது அவர் காவலர் ஒருவரிடம் இருந்து துப்பாக்கியைப் பிடுங்கி, ‘அமெரிக்கர்களுக்கு மரணம்’ என்று கூச்சலிட்டு அவர்களைச் சுட்டார்.
பாகிஸ்தானில் பிறந்தஅவர் 1991 இல் அமெரிக்காவிற்கு வந்து எம்ஐடியில் ஒரு பகுதி உதவித்தொகையை வென்று, நரம்பியல் அறுவை சிகிச்சை கற்றார்.
அவர் 1991 இல் டெக்சாஸில் தனது சகோதரருடன் வசித்து வந்தார், அங்கு அவர் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஒரு வருடம் படித்தார். அப்போது இஸ்லாம் பற்றிய வழக்கமான உரைகளை வழங்கினார்.
1993 ஆம் ஆண்டில், போஸ்னியப் போரில் பாதிக்கப்பட்டவர்களிற்கு உதவ முயன்றார். சட்டத்தை மீறுவதாக இருந்தாலும், ‘நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு ஏதாவது உதவ வேண்டும்’ என்று அவர் விரும்பினார்.
அதே ஆண்டு, அவரும் சில நண்பர்களும் போஸ்னியப் போரின்போது கொல்லப்பட்ட முஸ்லிம்களுக்கு எப்படி பணம் திரட்டுவது என்று விவாதித்தபோது, அவர்களில் ஒருவர் FBI இன் மோஸ்ட் வாண்டட் பட்டியலில் செல்ல விரும்பவில்லை என்று கேலி செய்தார்.
அந்த பட்டியலில் சேருவது முஸ்லிம்களிற்கு பெருமை என சித்திக் பதிலளித்துள்ளார்.
பின்னர் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றுள்ளார்.
சித்திக்கி ஒரு பணக்கார பாகிஸ்தானிய குடும்பத்தின் மகனான முகமது அம்ஜத் கானை, திருமணம் செய்து கொண்டார்.
எனினும், அவர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து விட்டதாக பின்னர் அம்ஜத் கான் உணர்ந்தார். ஜிகாத் மத பிரச்சாரத்திற்கு வாய்ப்பாக பயன்படுத்தவே தன்னை திருமணம் செய்ததாக அவர் கருதினார்.
குடும்பத்தின் நல்வாழ்வு சித்திக்கின் குறிக்கோள் அல்ல, ஜிஹாத் செயற்பாடுகளிற்கு தனது குடும்பத்தின் தொடர்புகள் உதவும் என்பதற்காகவே திருமணம் செய்துகொண்டார் என கணவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒசாமா பின்லேடனின் வீடியோக்களை தான் தவறாமல் பார்த்ததையும், நியூ ஹாம்ப்ஷயரில் உள்ள பயங்கரவாத பயிற்சி முகாம்களில் அல்-கிஃபாவின் ஆர்வலர்களுடன் வார இறுதி நாட்களை கழித்ததையும் கான் விவரித்துள்ளார்.
தன்னுடன் வேலை செய்யும் சக ஊழியர்களை வீட்டுக்கு அழைத்து வந்தால், ‘இஸ்லாமுக்கு மாறுவதைப் பற்றி மட்டுமே சித்திக் பேசினார்’. என கணவர் குறிப்பிட்டார். இதனால் தனது நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வருவதையே நிறுத்தி விட்டார்.
மூன்று பிள்ளைகளின் தாயான இவர் 9/11 பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு தீவிரமயமாக்கப்பட்டு, கருப்பு உடையுடனேயே நடமாடினார். மீண்டும் பாகிஸ்தான் செல்ல வேண்டுமென வலியுறுத்தினார். கணவர் மறுக்கவே, அவரை விவாகரத்து செய்துவிட்டு மீண்டும் பாகிஸ்தானுக்குச் சென்றார். அங்கு அவர் 9/11 தாக்குதல் சூத்திரதாரியான கட்டிடக் கலைஞர் காலித் ஷேக் முகமதுவின் மருமகனான அம்மார் அல்-பலூச்சியை மறுமணம் செய்து கொண்டார்.
நியூயார்க்கின் புரூக்ளின் பாலம் மற்றும் எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் மீது இரசாயனத் தாக்குதல்களுக்குத் திட்டமிட்டு இரண்டு கிலோ விஷம் சோடியம் சயனைட் அவரிடம் இருந்ததைக் கண்டறிந்த உள்ளூர் படைகளால் 2008 இல் ஆப்கானிஸ்தானில் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அமெரிக்கா கொண்டு வரப்பட்டு, 2010 இல் 86 வருட சிறைத்தண்டனை அறிவிக்கப்பட்டது.