திருகோணமலையில் சூட்சுமமாக கடை உடைத்து சிகரெட் திருட்டு!

Date:

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை-கண்டி பிரதான வீதி ஆண்டாங்குளம் பகுதியில் வர்த்தக நிலையம் சூட்சுமமான முறையில் உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று(16) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

வர்த்தக நிலையத்தை சுற்றி பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட இரும்பு கம்பி வலையினை சூட்சுமமான முறையில் வெட்டப்பட்டு கதவும் உடைக்கப்பட்டு திருடன் நழைநதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

வர்த்தக நிலையத்தில் சிகரெட் மற்றும் பணம் போன்றவைகள் திருடப்பட்டுள்ளதாகவும் கடை உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் திருகோணமலை தலைமையக பொலிசாரின் உதவியுடன் கைரேகை நிபுணர்களின் உதவியுடன் தரவுகள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

குறித்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் உப்புவெளி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-ரவ்பீக் பாயிஸ்-

spot_imgspot_img

More like this
Related

சம்மாந்துறையில் ‘ஐ*ஸ்’ போதைப்பொருளுடன் 21 வயது இளைஞன் கைது!

4 கிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை  பொலிஸாரால்...

சர்வதேச சமாதான அமைப்பின் விசேட விருது: 100 பேரில் ஒருவராக இலங்கையர் கௌரவிப்பு

சர்வதேச சமாதான அமைப்பினால் உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 முக்கிய...

கொழும்புப்பிட்டி ஜும்மாப் பள்ளிவாசலில் இராணுவ ஆண்டுவிழா ஆசீர்வாத நிகழ்வு

இலங்கை இராணுவத்தின் ஆண்டுவிழாவை முன்னிட்டு, நாட்டின் அமைதிக்கும் இராணுவ வீரர்களின் பாதுகாப்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்