தடையில்லா எரிபொருள் விநியோகத்திற்கு 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவை

Date:

இந்த ஆண்டு முழுவதும் எண்ணெய் இறக்குமதிக்கு தேவையான நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்டுவதற்கான வழிகள் குறித்து ஆராயும் உயர்மட்ட கலந்துரையாடிடலெலான்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது.

மத்திய வங்கி, இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி, நிதி மற்றும் எரிசக்தி அமைச்சுகள், இலங்கை மின்சார சபை  மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்  ஆகியவற்றின் அதிகாரிகளும் கூட்டத்திற்கு அழைக்கப்படவுள்ளனர்.

போக்குவரத்து மற்றும் மின்சாரம் ஆகிய இரண்டு துறைகளுக்கும் தடையில்லா எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதற்காக மத்திய வங்கியிடம், பெற்றோலிய கூட்டுத்தாபனத்தால் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.

பெற்றோலிய கூட்டுத்தாபனம் சமர்ப்பித்துள்ள திட்டத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் கச்சா எண்ணெய் தேவையான அளவுகளை விவரித்துள்ளது மற்றும் தடையின்றி விநியோகத்தை பராமரிக்க 88 இறக்குமதிகள் தேவைப்படும் என்று கூறியுள்ளது.

அதன்படி, ஒரு மாதத்திற்கு 90,000 மெட்ரிக் தொன் பெட்ரோல், 150,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 90,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் தேவைப்படும் என்று பெற்றொலிய கூட்டுத்தாபன பரிந்துரை கூறுகிறது.

இந்தியாவில் இருந்து எரிபொருள் வாங்குவதற்கு விரைவில் வழங்கப்படும் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வரிக்கு கூடுதலாக எரிபொருள் வாங்குவதற்கு நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை.

எரிபொருளை முறையாக வழங்குவதை உறுதிசெய்யும் வகையில் உரிய காலத்தில் நிதி கிடைக்க வழிவகை செய்வது குறித்து உயர்மட்டக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

இதேவேளை, அடுத்த இரண்டு மாதங்களுக்கு எரிபொருள் விநியோகத்திற்காக நிதி வழங்குமாறு மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலிடம் பெற்றோலிய கூட்டுத்தாபனம் கோரிக்கை விடுத்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

யா/கோப்பாய் சரவணபவானந்தா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் பாடசாலை மைதானத்தில் நேறறு நடைபெற்றது.

நூற்றாண்டு விழாவின் பிரதான நிகழ்வாக கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட பாடசாலை பிரதான நுழைவாயில்...

களுத்துறை யில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மட்டு ஆறுமுகத்தான் குடியிருப்பைச் சேர்ந்த ஒருவர் வாழைச்சேனையில் வைத்து கைது

களுத்துறை நாகொடாவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்பட்ட ஏறாவூர் ஆறுமுகத்தான்...

இந்திய ஐரெக் பயிற்சிபெற்ற இலங்கையர்கள் அமைப்பு கொழும்பில் அங்குரார்ப்பணம் !

இந்தியா வெளிவிவகார அமைச்சின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்