சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் மூன்றாவது பாடலை வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, ப்ரியங்கா அருள்மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் எதற்கும் துணிந்தவன்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். இமான் இசையில் வாடா தம்பி, உள்ளம் உருகுதய்யா ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
இந்நிலையில் மூன்றாவது பாடல் ஜனவரி 16ஆம் திகதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று சன் பிக்சர்ஸ் தெரிவித்தது. சூர்யா படத்திற்கு சிவகார்த்திகேயன் பாடல் எழுதியிருக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில் அது சும்மா சுர்ருனு பாடல் தான் என்பது தெரிய வந்தது.
அறிவித்தபடி பாடலை வெளியிட்டுள்ளனர்.



