Pagetamil
கிழக்கு

திருமலையில் முதன்முறையாக நுண் கலைஞர்களை கொண்டு உருவான சிற்ப ஓவியக் கண்காட்சி

திருகோணமலை நகரில் முதன்முறையாக பி.எப்.எ. நுண் கலைஞர்களைக் கொண்டு உருவான சிற்பம் ஓவியம் சார்ந்த கலைப் படைப்புகள் கண்காட்சி ஒன்று இடம் பெற்றது

இன்று (15)சனிக்கிழமை திருகோணமலை நகராட்சி மன்ற கேட்போர் கூடத்தில் கலைஞர் எம்.சாஜித் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

துணியில் வரையப்பட்ட ஓவியங்களும் சிற்பங்களும் ஓவியங்களும் அதாவது நவீன ஓவியங்கள் வரை இந்த ஓவிய கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.

மேலும் கலைஞர் அவர்கள் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

நானும் என்னுடைய சக நண்பர்களையும் உள்ளடக்கி இந்த கண்காட்சியை ஒழுங்குபடுத்தி இருந்தோம் மேலும் இந்த கண்காட்சியின் முக்கிய நோக்கம் திருகோணமலை மாவட்டத்தில் சித்திர, சிட்ப அறிவு மக்களிடத்தில் கொண்டு செல்ல.

மேலும் சித்திர கலை ஒன்றை பார்த்து வரைவது அல்ல. அது ஒரு போட்டோ பிரதி வேலை செய்வது போல். ஆனால் ஒரு ஓவியம் ஒரு கலைஞன் மனதில் இருந்து வந்து ஓவியமாக வரவேண்டும்.

மேலும் கண்காட்சியினை பார்வையிட வந்த ஆசிரியர் ஒருவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

இங்கு வைக்கப்பட்டுள்ள ஒவியம் மிகவும் நுட்பமான முறையில் முழு கலை சிந்தனையுடன் தர்த்துர்வமாக வரையப்பட்டுள்ளதுடன் இவ்வாறான கலைஞர்கள் வரவேற்கப்பட வேண்டும். சமூகத்தில் சிறந்த அங்கிகாரம் கிடைக்க அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் பாடசாலை மட்டத்தில் சித்திர கலை தொடர்பில் தெளிவு படுத்த பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

இவ் கண்காட்சியில் பாடசாலை மாணவர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மட்டக்களப்பின் சுற்றுலா துறையை வலுப்படுத்தும் பணிகள் ஆரம்பம்

east tamil

கேரளா கஞ்சாவுடன் 34 வயதுடைய சந்தேக நபர் கைது

Pagetamil

வெருகலில் மீண்டும் பௌத்தமயமாக்கல், அருணின் பதில் என்ன?

east tamil

பெற்றோலிய துறையை மேம்படுத்த அருண் முயற்சி

east tamil

கிண்ணியா சிறுவன் உலக சாதனை

east tamil

Leave a Comment