இந்த வருடம் ஜனவரி மாதம் 7 ஆம் திகதி மஹரகம பிரதேசத்தில் இருந்து காணாமல் போன 15 வயது சிறுமி வீடு திரும்பியுள்ளதாக சிறுமியின் தாயார் இன்று பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
மஹரகம, நாவின்ன பிரதேசத்தைச் சேர்ந்த நேஹா கௌமதி ஹேரத் என்ற சிறுமி காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், மஹரகம பொலிஸ் விசேட குழுவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பொலிசார் செவ்வாய்க்கிழமை சிறுமியின் படத்தை ஊடகங்களுக்கு வெளியிட்டு, அவரை கண்டுபிடிக்க பொது உதவியை நாடினர்.
சிறுமியின் தாயார் மஹரகம OIC யை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு,
இந்தச் சம்பவம் ஊடகங்களில் வெளியானதையடுத்து தனது மகள் தமக்கு போன் செய்துவிட்டு வீடு திரும்பியதாக குறிப்பிட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1