தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, சிறையிலிருந்து உயர் கல்வியை தொடர்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ராமநாயக்க விடுத்த கோரிக்கைக்கு அமைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, தற்போதுள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு நாவலவிலுள்ள திறந்த பல்கலைக்கழகத்தில் இளைஞர் பணிக்கான முகாமைத்துவம் மற்றும் தலைமைத்துவ திறன்கள் தொடர்பான பட்டப்படிப்பை தொடர்வதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.
சூம் மூலம் விரிவுரைகளில் கலந்துகொள்ள அவருக்கு அனுமதி வழங்கப்படும் என சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1