வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக உள்ள தேவாலய வளாகத்தில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வெடிகுண்டு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் தேவாலயத்தில் பணிபுரியும் மூன்று ஊழியர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி, தேவாலயத்தின் சிலைக்கு அருகில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது.
விசேட அதிரடிப்படையினர் வெடிகுண்டை கைப்பற்றி செயலிழக்கச் செய்யவுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1