முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் உடல்நிலையை ஆராய்ந்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது.
ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் போலி சாட்சியங்களை தயாரித்து சாட்சியங்களை மறைத்தமை தொடர்பில் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த இந்த உத்தரவை பிறப்பித்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதிவாதியான பாட்டலி சம்பிக்க ரணவக்க நீதிமன்றில் முன்னிலையாகவில்லை.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1