ஏற்கனவே 10 வழக்குகள்… யாழ்ப்பாணத்தின் பயங்கர ரௌடி கைது!

Date:

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஆவா குழுவை சேர்ந்த ரௌடி ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மானிப்பாயை சேர்ந்த 26 வயதுடைய கொலின் என்ற ரௌடியே கைதாகினார்.

கடந்த நவம்பர் 23 ஆம் திகதி அதிகாலை தாவடியிலுள்ள வீடொன்றிற்குள் புகுந்து, வீட்டு யன்னல்களை அடித்துடைத்ததுடன், மோட்டார் சைக்கிளொன்றை உருட்டி வந்து, தாவடி பகுதியில் வீதியில் போட்டு, அடித்துடைத்திருந்தனர்.

அதேகும்பல், ஆனைக்கோட்டைக்கு சென்று, 48 வயதான ஒருவரை வாளால் வெட்டினர்.

சிறிய நேர இடைவெளியில் இரண்டு சம்பவங்களும் நடந்தன.

சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் மானிப்பாய் புதுமடத்தைச் சேர்ந்த ரௌடி கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிராக நீதிமன்றங்களில் பத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

ஃப்ளைதுபாய் துணை விமானி கோடரி மூலம் பயங்கரவாத தாக்குதல்

Flydubai விமானம் FZ1073-இன் துணை விமானி, விமானப் பயணத்தின்போது ஒரு "பயங்கரவாத"...

1 Kg கோழி இறைச்சி இலஞ்சமாக கேட்ட பொலிஸ்காரர் பணி இடைநீக்கம்!

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவருக்குப் பொலிஸ் பிணை வழங்குவதற்காக ஒரு கிலோகிராம்...

வெளிநாட்டு பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய முச்சக்கர வண்டி சாரதிக்கு 10 வருட சிறை!

வேலைவாய்ப்பு தருவதாகக் கூறி இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்