திருகோணமலை கந்தளாய் பிரதான வீதி ஆண்டாங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு விமானப்படை உத்தியோகத்தர்கள் பலத்த படுகாயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இவ்விபத்து நேற்று (09) இரவு 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஆண்டாங்குளம் பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அதிசொகுசு வேனுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் சீனக்குடா விமான நிலையத்தில் கடமையாற்றி வரும் விமானப்படை உத்தியோகத்தர்கள் இருவர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
காயமடைந்தவர்கள் விமானப்படை உத்தியோகத்தர்களான ஆர்.எம். நுவன் சமீர பண்டார (32 வயது) மற்றும் சுரங்க கருணாரத்ன (43 வயது) ஆகிய இருவருமே படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் மது போதையில் இருந்ததாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
குறித்த விபத்து தொடர்பில் உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
–ரவ்பீக் பாயிஸ்-