25.4 C
Jaffna
January 19, 2025
Pagetamil
உலகம் முக்கியச் செய்திகள்

சைப்ரஸில் டெல்டாவும், ஒமைக்ரோனும் இணைந்த புதிய கொரோனா வைரஸ்!

சைப்ரஸ் நாட்டில் புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஆராய்ச்சியாளர்கள் டெல்டாக்ரோன் எனப் பெயர் சூட்டியுள்ளனர்.

கடந்த 2021 நவம்பர் மாதம் தென்னாபிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட ஒமைக்ரோன் வைரஸ் இப்போது உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்நிலையில், சைப்ரஸ் நாட்டில் 25 பேருக்கு டெல்டாக்ரோன் என்ற புதிய வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இது குறித்து சைப்ரஸ் பல்கலைக்கழகத்தின் உயிரியல் துறை பேராசிரியர் லியோண்டியோஸ் காஸ்ட்ரிக்ஸ் கூறியதாவது-

தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சிலருக்கு ஒமைக்ரோன் மற்றும் டெல்டா வைரஸ் என இரண்டு வைரஸ்களின் பாதிப்பும் உள்ளது. இந்த இரண்டு பாதிப்பும் இணைந்து இருப்பதை டெல்டாக்ரோன் வைரஸ் என அழைக்கிறோம். இதில் ஒமைக்ரோனின் மரபணு அடையாளங்களும், டெல்டா வைரஸின் மரபணுத் தொகுதியும் உள்ளன.

இந்த வகை டெல்டாக்ரோன் வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் 25 பேரைக் கண்டறிந்துள்ளோம். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை தேவைப்படும் சூழலில் அனுமதியாகும் நோயாளிகள் மத்தியில் தான் இந்தப் பாதிப்பு தெரிகிறது.

25 பேரிடமும் இருந்து சேகரிக்கப்பட்ட ஸ்வாப் மாதிரிகளை குளோபல் இன்ஃப்லுயன்ஸா சர்வைலன்ஸ் அண்ட் ரெஸ்பான்ஸ் சிஸ்டம்’ (GISAID) என்ற அமைப்பின் ஆய்வுக்காக அனுப்பியுள்ளோம்.

இந்த வகை வைரஸ் வேகமாகப் பரவக்கூடியதா உள்ளிட்ட கூறுகளை இந்த அமைப்பு பகுப்பாய்வு செய்து தெரிவிக்கும். ஆனால், எனது தனிப்பட்ட கணிப்பின்படி, ஒமைக்ரோன் வைரஸை விட இன்னும் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும் ஒமைக்ரோன் பிளஸ் திரிபு தான் மேலோங்கி நிற்கும் என்றார்.

கடந்த 5 வாரங்களாக உலக அளவில் ஒமைக்ரோன் வைரஸ் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதுபோல கொரோனா தொற்றும் வேகமாக பரவுகிறது.

ஆனாலும், இதன் பாதிப்புகுறைவாக உள்ளது. பெரும்பாலும் அறிகுறிகள் இல்லாமலோ அல்லது இலேசான அறிகுறியோ உள்ளது. தொற்றால் தீவிரமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்படுவோர் 1 முதல் 2 சதவீதமாக உள்ளது. கொரோனா 2வது அலையுடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு என்பது ஆறுதல் தரும் விஷயம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

3 மணித்தியால இழுபறியின் பின் இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்தம் அமுலாகியது!

Pagetamil

2025ம் ஆண்டுக்கான ஒஸ்கர் விருது விழா ரத்தாகுமா?

east tamil

கவிழ்ந்த கொள்கலனில் பெற்றோல் எடுத்த 70 பேர் எரிந்து பலி

Pagetamil

காஸா எல்லையில் இன்று போர் நிறுத்தம்

east tamil

படகு கவிழ்ந்து 40 பாகிஸ்தானியர்கள் பலி

east tamil

Leave a Comment