கஸகஸ்தானில் போராட்டக்காரர்களின் மீது துப்பாக்கிசசூடு நடத்த அந்நாட்டு ஜனாதிபதி இராணுவத்துக்கு அனுமதி அளித்துள்ளார்.
கஸக்ஸ்தானில், சுதந்திரத்துக்குப் பின், இதுவரை இல்லாத அளவில் மோசமான கலவரம் வெடித்துள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பால் தொடங்கிய கலவரங்களில் இதுவரை பலர் கொல்லப்பட்டனர்.
போராட்டம் நடத்துவோருடன் பேச்சு நடத்துமாறு விடுக்கப்படும் கோரிக்கைகளை கஸகஸ்தான் ஜனாதிபதி காஸிம் ஜோமார்ட் டோக்காயேவ் நிராகரித்துள்ளார்.
அவர்களை முற்றாகத் துடைத்தொழித்து நாட்டில் அமைதியை நிலைநாட்டப்போவதாக அவர் உறுதியளித்தார்.
குற்றவாளிகளுடனும் கொலைகாரர்களுடனும் சமரசப் பேச்சு நடத்துவதில் அர்த்தமில்லை என்றார் அவர்.
இந்நிலையில் அல்மட்டி நகரில் அமைதிகாக்க, ரஷ்ய துருப்பினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
நாட்டின் முக்கிய அமைப்புகளும் உள்கட்டமைப்புகளும் போராளிகளின் பிடிக்குச் சென்றுவிடாமல் பாதுகாப்பதில் அவர்கள் கவனம் செலுத்துகின்றனர்.
கஸகஸ்தானை பொறுமை காக்கும்படி ஐ,நாவும், அமெரிக்காவும் கேட்டுக்கொண்டுள்ளன.