26.9 C
Jaffna
January 28, 2025
Pagetamil
இலங்கை

தலைமன்னாரிலிருந்து சென்ற புகையிரதத்தில் உரிமை கோரப்படாத பொதியில் போதைப்பொருள்!

தலைமன்னார் புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கி இன்று (8) சனிக்கிழமை காலை பயணித்த புகையிரதத்தில் உரிமை கோராத பயணப் பொதி ஒன்றில் இருந்து இராணுவத்தினரால் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

உரிமை கோராத குறித்த பயணப் பொதியில் இருந்து சுமார் 360 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக. தெரிய வரு கின்றது.

தலைமன்னாரில் இருந்து இன்று (8) காலை கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் தோட்டவெளி புகையிரத நிலையத்தை சென்றடைந்தது.

இதன் போது அங்கு கடமையில் இருந்த இராணுவத்தினர் குறித்த புகையிரதத்தில் ஏறியள்ளனர்.

இதன்போது குறித்த புகையிரதத்தில் உரிமை கோரப்படாத பயணப் பொதி ஒன்று காணப்பட்டுள்ளது.

எனினும் குறித்த பயணப்பொதியில் எவரும் உரிமை கோராத நிலையில் குறித்த புகையிரதம் மன்னார் சௌத்பார் புகையிரத நிலையத்தை சென்றடைந்தது.

எனினும் குறித்த பயணப் பொதிக்கு எவரும் உரிமை கோராத நிலையில் சௌத்பார் இராணுவத்தினர் அந்த பயண பொதியை சோதனை செய்தனர்.

இதன்போது குறித்த பயணப் பொதியில் இருந்து ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட ஐஸ் போதைப்பொருள் 360 கிராம் எடை கொண்டது என தெரிய வந்துள்ளது.

மேலதிக விசாரணை மற்றும் நடவடிக்கைகளுக்காக சௌத்பார் இராணுவத்தினரால் குறித்த ஐஸ் போதைப்பொருள் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நிதி சிக்கலுக்குப் பின் துறைமுக புதைகுழி அகழ்வு மீண்டும் ஆரம்பம்

east tamil

கடந்த ஆண்டில் சிறுவர்கள் தொடர்பாக 8746 முறைப்பாடுகள் பதிவு – சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை

east tamil

பண்டத்தரிப்பில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா

east tamil

Update – மாவை. சேனாதிராஜா அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

east tamil

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமாகவுள்ள இலங்கை பொருளாதார உச்சி மாநாடு

east tamil

Leave a Comment