அரச புலனாய்வுத்துறையின் புலனாய்வு அறிக்கை, அரசதலைமைக்கு கிடைப்பதற்கு முன்னர் ஒரு சாதாரண நாடாளுமன்ற உறுப்பினருக்கு எவ்வாறு கிடைத்தது ஏனன்பது பற்றி அரசாங்கம் உடனடியாக விசாரணை நடத்த வேண்டுமென பதவிநீக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வலிறுத்தியுள்ளார்.
கோட்டாபய நிர்வாகத்தின் குறைபாடுகள் சிலவற்றை பகிரங்கமாக சுட்டிக்காட்டியதால், இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து சுசில் பிரேமஜயந்த அண்மையில் நீக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், நாடாளுமன்றத்திற்குள் மோதல்,பெண்களை இழிவுபடுத்துவம் விதமாக கருத்து தெரிவித்தமை என ‘வில்லங்கமாக’ பிரபலமாகியிருந்த ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி, ‘அரசாங்கத்தை கவிழ்க்க முயலும் சதித்திட்டம் பற்றிய உளவுத்துறை அறிக்கையில் அடிப்படையிலேயே சுசில் பிரேமஜயந்த பதவிநீக்கப்பட்டிருந்தார்’ என வில்லங்கமாக கருத்தை வெளியிட்டிருந்தார்.
இது தொடர்பில் பதிலளித்துள்ள சுசில் பிரேமஜயந்த, அந்த குற்றச்சாட்டுக்களை மறுத்தார்.
அரச புலனாய்வு அறிக்கை, அரச தலைமைக்கு கிடைப்பதற்கு முன்னர் ஒரு எம்.பிக்கு எப்படி கிடைத்தது என்றும் கேள்வியெழுப்பினார்.
அரசியல்வாதிகளிற்கு பதிலாக, எரிவாயு பற்றாக்குறை போன்ற நாட்டில் உள்ள சிக்கல்களைப் பொறுத்தவரை அவர்களின் கருத்துக்களை அறிவதற்கு புலனாய்வு அதிகாரிகள் பொதுமக்களில்தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.