அவுஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில் சில COVID-19 கட்டுப்பாடுகள் மீண்டும் நடப்புக்கு வரவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டில் ஆக அதிக மக்கள் தொகையைக் கொண்ட அம்மாநிலத்தில் இரவுநேரக் கேளிக்கைக் கூடங்களை மூடுதல், அவசரமில்லா அறுவை சிகிச்சைகளைத் தள்ளிவைத்தல் போன்ற நடவடிக்கைகள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படலாம்.
தற்போது அவுஸ்திரேலியாவில் நோய்ப்பரவல் தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாள்களாக அங்கு நோய்த்தொற்றுச் சம்பவங்கள் புதுப்புது உச்சங்களை எட்டியுள்ளன.
அதன் சுகாதாரக் கட்டமைப்பில் பெரும் நெருக்கடியும் எழுந்துள்ளது.
கட்டுப்பாடுகள் குறித்து மாநில அரசாங்கம் ஒப்புதல் அளித்த பிறகு அவை நடைமுறைப்படுத்தப்படலாம் என்று தெரிகிறது.
முடக்கநிலைக்குப் பதில் கட்டுப்பாடுகளை அறிவித்து நிலைமையைச் சரிசெய்ய அவுஸ்திரேலியா திட்டமிடுகிறது.
அவுஸ்திரேலியா ஓமைக்ரோன் வைரஸ் தொற்றால் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.