ஈரானில் சுட்டுவீழ்த்தப்பட்ட உக்ரேனிய விமானம்: பாதிக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க கனடா நீதிமன்றம் உத்தரவு!

Date:

உக்ரேனிய விமானம் ஒன்று சுடப்பட்டு விழுந்து நொறுங்கிய வழக்கில் பாதிக்கப்பட்ட 6 பேரின் குடும்பத்திற்கு 84 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க கனடா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்த முடிவினால் ஈரானுக்கும் கனடாவுக்கும் இடையே உள்ள பதற்றம் மோசமடையக்கூடும் என்று கூறப்படுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உக்ரேனின் அனைத்துலக விமான நிறுவனத்தைச் சேர்ந்த விமானம் ஒன்றை ஈரான் தவறுதலாக சுட்டு வீழ்த்தியது. அதில் பயணம் மேற்கொண்டிருந்த 176 பேரும் உயிரிழந்தனர்.

ஈராக்கில் நிலை கொண்டிருந்த அமெரிக்கா மீது ரொக்கெட் தாக்குதல் நடத்திய பின்னர், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாமென்ற பதற்றத்தில் மத்தியில், இந்த சம்பவம் நடந்தது. இராணுவப் பதற்றத்தின் மத்தியில் தவறுதலாக அந்த விமானம் தாக்கப்பட்டதாக டெஹ்ரான் வலியுறுத்தியது.

உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினர் ஈரானுக்கு எதிராக நீதிமன்ற வழக்குத் தொடுத்திருந்தனர்.

ஈரானும் ஏனைய அதிகாரிகளும் அந்தச் சம்பவத்திற்குக் காரணம் என நம்புவதாக அவர்கள் தெரிவித்தனர்.

கனடாவில் உள்ள ஈரானியச் சொத்துகளை முடக்கி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குமாறு வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

போக்குவரத்து விதிகளை மீறி ரிக்ரொக் வீடியோ: 3 யுவதிகள் கைது!

புத்தல-அம்பகொலவெவ வீதியில் தலைக்கவசம் அணியாமல், போக்குவரத்து விதிகளை மீறி மோட்டார் சைக்கிள்...

2 அணிகளாகப் பிரிந்தது அதிமுக: தற்காலிக பேரவைத் தலைவரிடம் பழனிசாமி, வேலுமணி தரப்பினர் தனித்தனியே கடிதம்

சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் யார் என்பதில் பொதுச் செயலாளர் பழனிசாமி...

பொலிசார் பௌத்தர்களென்பதால் தையிட்டி விகாராதிபதிக்கு பயந்து செயற்படுகிறார்கள்: எம்.ஏ.சுமந்திரன்

பொலிஸார் பௌத்தர்களாக இருப்பதனால் , பௌத்த பீடாதிபதிகளுக்கு பயந்து சட்டத்தை நடைமுறைப்படுத்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்