அவுஸ்திரேலியாவில் தமிழ் இளைஞர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
விக்டோரியாவின் தென்மேற்கில் உள்ள ஜீலாங் கடற்கரையில் அவர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தார். நண்பர்களுடன் விடுமுறையை கழிக்க சென்ற போது இந்த அனர்த்தம் நிகழ்ந்தது.
யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சொந்த இடமாக கொண்ட, செல்வராசா சிறிபிரகாஸ் (29) என்பவரே உயிரிழ்தார். அவர் தற்போது மெல்பர்ன், எப்பிங் பகுதியில் வசித்து வருகிறார்.
அதிகாலை 4.35 மணியளவில் ரிச்சி பவுல்வர்டு கடற்கரையில் அவர் அலையில் அடித்து செல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, மீட்புக்குழுக்கள் தேடுதலை மேற்கொண்டனர்.
மாலை வேளையில், ஜீலாங்கில் உள்ள கிழக்கு கடற்கரையின் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1