நாட்டிலுள்ள அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின புதிய கல்வியாண்டின் முதல் தவணை இன்று (3) ஆரம்பிக்கிறது.
2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி முதல் நேற்று வரை கிறிஸ்மஸ் விடுமுறைக்காக பாடசாலைகளை மூடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்திருந்தது.
அதன்படி, தற்போது நிலவும் கோவிட்-19 சூழ்நிலைக்கு மத்தியில் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு முன்னுரிமை அளித்து பாடசாலைகளைத் திறக்கத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டதையடுத்து இன்று முதல் சிசு சரிய பஸ்கள் வழமை போன்று சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
தேவைப்பட்டால் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1