Pagetamil
விளையாட்டு

அவுஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட்டுக்கு கொரோனா தொற்று!

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் டிராவிஸ் ஹெட்டுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இரு அணிகளும் இடையிலான 4வது டெஸ்ட் போட்டி ஜனவரி 5 ஆம் திகதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது.இந்த நிலையில் அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் டிராவிஸ் ஹெட் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது:

அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் டிராவிஸ் ஹெட்க்கு கொரோனா பரிசோதனை முடிவில் தொற்று உறுதியாகியுள்ளது. அவருக்கு கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை. அவர் அடுத்த 7 நாட்களுக்கு மெல்போனில் தன்னை தனிமைப்படுத்திக்கொள்வார்.

அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் அனைத்து வீரர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. டிராவிஸ் ஹெட் விரைவில் குணமடைந்து 5வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவர் என எதிர்பார்க்கிறோம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தீர்ந்தது 10 ஆண்டு தாகம்: அவுஸ்திரேலியா வசமானது போர்டர் – கவாஸ்கர் டிராபி!

Pagetamil

சாம் கான்ஸ்டாஸ் உடன் மோதிய விராட் கோலி: ஐசிசி விதிகள் சொல்வது என்ன?

Pagetamil

நியூசிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

Pagetamil

21ஆம் நூற்றாண்டின் அரிய கிரிக்கெட் சாதனை: பாகிஸ்தான் அணி அசத்தல்!

Pagetamil

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார் இந்திய வீரர் அஸ்வின்!

Pagetamil

Leave a Comment