பாடசாலை ஒன்றின் நிரந்தரமானவர்கள் அந்த பாடசாலை சமூகத்தினரே என்பதனை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். ஆகவே பாடசாலையினை முன்னெடுத்து செல்வதற்காக உழைக்க வேண்டிய பொறுப்பு சமூகத்தை சார்த்தவர்களிடம்தான் இருக்கின்றது என கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவத்தார்
கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளராக பதவி உயர்பு பெற்ற திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று குறுமண்வெளி சிவசக்தி மகா வித்தியாலம் மற்றும் குறுமண்வெளி கனிஷ்ட வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் ஒன்றிணைந்து மேற் கொண்ட பாராட்டு விழா குறுமண்வெளி சிவசக்தி வித்தியாலயத்தில் அதன் அதிபர் புஸ்பராஜா தலமையில் நடைபெற்றது. இப் பாராட்டு வழாவில் கலந்து கொண்டு எற்புரையாற்றும் போதே அவர் இவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்-
உண்மையில் பாடசாலை ஒன்றில் அதிபர்ääஆசிரியர்கள், மாணவர்கள், ஏனைய ஊழியர்கள் அனைவரும் தற்காலிகமானவர்கள் காரணம் கடமை நிமிர்த்தம் வேறு பாடசாலைகளுக்கு சென்றுவிடுவார்கள். பாடசாலை ஒன்றின் நிரந்தரமானவர்கள் அந்த பாடசாலை சமூகத்தினரே என்பதனை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். ஆகவே பாடசாலையினை முன்னெடுத்து செல்வதற்காக உழைக்க வேண்டிய பொறுப்பு சமூகத்தை சார்த்தவர்களிடம்தான் இருக்கின்றது. எனவே சமூகத்தினர் அனைவரும் தனிப்பட்ட கோபதாபங்களை கழைந்து பாடசாலையின் அபிவிருத்திக்காக பாடுபட வேண்டும்.
நான் யுத்த காலம் தொடக்கம் இப்பகுதியில் கடமையாற்றி வருகின்றேன். எனவே அன்று தொடக்கம் இன்ற வரை அனைத்து பாடசாலைகளின் வரலாறுகளை அறிந்தவர் என்ற வகையில் இந்த பாடசாலை எவ்வாறான வரலாற்றை கொண்டது என்பது எனக்கு நன்கு தெரியும். இந்த பாடசாலை மாணவன் ஒருவர் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண கல்விச் செயலாளராக இருந்துள்ளார். அவ்வாறான பொருமைக்குரிய பாடசாலையாக இப் பாடசாலை காணப்படுகின்றது.
தற்போது இப் பாடசாலையானது பட்டிருப்பு கல்வி வலயத்தில் பலதரப்பட்ட சாதனைகளை நிகழ்த்தி வருகின்றது. அதற்கு துணையாக இன்று திறமையான அதிபர் ஒருவர் தற்போது சிறப்பான நிர்வாகத்தினை மேற் கொண்டு வருகின்றார். தற்போது அவர் ஒரு படிமேற் சென்று கணித விஞ்ஞான பிரிவினையும் ஆரம்பித்திருக்கின்றமை சிறப்பானதொரு விடயமாகும். மாகாணத்தில் கணித, விஞ்ஞான துறையில் சிறந்த பெறுபேறுகளைப் இப்பாடசாலையான எதிர்காலத்தில் பெறவேண்டும் என நான் வாழ்த்துகின்றேன்.
எமது பட்டிருப்பு வலயமானது சிறந்த அதிபர்களை கொண்டு பாடசாலைகளில் ஒரு கட்டுக்கோப்பான நிர்வாகத்தினை ஆற்றிவருகின்றனர். அதே போன்று எமது வலய ஆசிரியர்களும் நிர்வாகத்திற்கு கட்டுபட்டு செயற்பட்டு வருகின்றமையை நான் மாகாண கல்விப் பணிப்பாளராக சென்றபோத உணரக்கூடியதாக உள்ளது. அதனை நினைத்து நான் பொருமையடைகின்றேன்.
எமது கிழக்கு மாகாணத்தை பார்த்தீர்களாக இருந்தால் ஐந்நூறுக்கும் மேற்பட்ட கணித ஆசிரியர்களின் பற்றாக்குறை காணப்படுகின்றது. இந்த பற்றாக்குறையை எங்களால் இலகுவாக பூர்த்தி செய்துவிடமுடியாது. அதற்காக நாங்கள் நீண்டகாலம் பயணிக்க வேண்டிய தேவை இருக்கின்றது. எனவே மாணவர்களை நாங்கள் கணித விஞ்ஞான துறைகளில் கற்பதற்கான சந்தர்ப்பத்தையும் வழிப்படுத்தல்களையும் மேற் கொள்ள வேண்டும்.
உங்களுக்கு நன்கு தெரியும் எதை விதைக்கின்றோமோ அதைத்தான் நாங்கள் அறுவடையாக பெறமுடியும். எனவே எமது மாகாணத்தில் கணித விஞ்ஞான துறைகளில் கற்கின்ற மாணவர்களினை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு வேண்டிய ஊக்கப்படுத்தல்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் எமக்கு இருக்கின்றது.
இந்துறைகளில் கற்கின்றவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதியின் பொருட்டு கூடுதலான கற்கை நெறிகளை தெரிவு செய்வதற்கான வாய்புக்கள் நிறையவே இருக்கின்றது. இதனூடாகத்தான் எதிர்காலத்தில் எமது மாகாணத்தில் கணித விஞ்ஞான அசிரியர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு இலகுவாக இருக்கும் என எதிர்பார்க்கின்றேன். என அவர் இதன்போது தெரிவித்தார்.
-பழுகாமம் நிருபர்-




