அம்பாறை புத்தங்கல வன மடத்தின் மடாதிபதி புத்தங்கல ஆனந்த தேரருக்கு ஜனாதிபதி
கோத்தபாய ராஜபக்ச மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர்.
ஆனந்த தேரரின் சகோதரரான பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவிற்கு அவர்கள் ஆறுதல் தெரிவித்தார்கள்.
அண்மைக்காலமாக கீரியும் பாம்புமாக மோதலில் ஈடுபடும் சரத் பொன்சேகா, சரத் வீரசேகர இறுதிச்சடங்கில் சந்தித்துக் கொண்டனர்.
புத்தங்கல ஆனந்த தேரரின் உடல் இன்று (30) பிற்பகல் 2.00 மணியளவில் அம்பாறை புத்தங்கல ஆரண்யசேனாசனத்திற்கு விமானம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது.
இராணுவத்தில் மேஜர் ஜெனரலாக இருந்து, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகமாகவும் கடமையாற்றிய ஆனந்த வீரசேகர, 2007ஆம் ஆண்டு புத்தங்கல ஆனந்தவாக மாறினார்.
புத்தங்கல ஆனந்த தேரர் நேற்று (28) காலை காலமானார். அவரது உடல் நாளை (31) அம்பாறை புத்தங்கல ஆரண்ய சேனாசனத்தில் தகனம் செய்யப்படும்.





