நீதி அமைச்சு ‘நீதிக்கான அணுகல்’ என்ற சிறப்பு நடமாடும் சேவையை தொடங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
நீதி அமைச்சு மற்றும் சிறைச்சாலை சீர்திருத்தம் மற்றும் சிறை மேலாண்மை இராஜாங்க அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களால் வழங்கப்படும் பொது சேவையை எளிதாக்கும் நோக்கத்துடன் இந்த சேவை ஆரம்பிக்கப்படுகிறது.
இந்த நடமாடும் சேவையானது அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதுடன், வட மாகாணத்தை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன்படி, பல்கலைக்கழக மாணவர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை வட மாகாணத்தில் நடைபெறவுள்ளன.
பொது மக்களை பாதிக்கும் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வை, நல்லிணக்கம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த, போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, வடமாகாணத்தில் நிலவும் நிலப்பிரச்சினைக்கான, பிறப்பு, திருமணம், இறப்பு சான்றிதழ்களைப் பெறுதல் போன்றவற்றையும் இந்த நடமாடும் சேவை மேற்கொள்ளும் என நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. .
வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முறைகள் குறித்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.