இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அரசாங்கத்துடன் இணைந்து பேருந்து தொழிற்துறைக்கு பாதகமான தீர்மானங்களை எடுத்தால் நாடு தழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு நடத்தப்படும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சம்மேளனத்தின் பிரதம செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் எச்சரித்துள்ளார்.
இன்று அறிவிக்கப்படவுள்ள பேருந்து கட்டண திருத்தம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரியஞ்சித், கொரோனா பாதிப்பில் இருந்து பேருந்து தொழில் இன்னும் மீண்டு வருவதாக தெரிவித்தார்.
பேருந்துகளுக்கான முற்கொடுப்பனவு அட்டைகளை அறிமுகப்படுத்துவதற்கு முன், கால அட்டவணைகள் மேம்படுத்தப்பட வேண்டும் மற்றும் தொழில்துறையில் பொதுவான வளர்ச்சி நடைபெற வேண்டும் என்றார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1