தம்புள்ளை, களுந்தாவ பரணகம பிரதேசத்தில் மரமொன்றில் மோதிய மோட்டார் சைக்கிள் கால்வாயில் விழுந்ததில் 13 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் தம்புள்ளை, பஹல அரவுல பகுதியைச் சேர்ந்த ரஷ்மிகா தினேஷ் சத்சர ஏகநாயக்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
காயமடைந்தவர்களில் 15 மற்றும் 16 வயதுடைய பாடசாலை மாணவர்களில் ஒருவர் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மற்றையவர் வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நண்பன் ஒருவரின் வீட்டுக்கு 2 மோட்டார் சைக்கிள்களில் 6 மாணவர்கள் சென்று கொண்டிருந்த நிலையில் நேற்று இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1