எங்களை அபிவிருத்தி செய்வதற்கு எங்களிடம் நிதி வசதிகள் இல்லை வெளிநாடுகள் வரும்போது நாட்டிற்கும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் யார் வந்தாலும் நாங்கள் வரவேற்போம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழுள்ள விவசாயிகளின் பிரச்சனை மற்றும் பல்வேறுபட்ட மாவட்டத்தின் பிரச்சினைகள் தொடர்பில் நேற்று (28) கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்
கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடு குளத்தின் கீழ் உள்ள விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது குறிப்பாக உழவர் சந்தை அவசியம் தேவை என்பதனை வலியுறுத்தி இருந்தார்கள் அதனை நடைமுறைப் படுத்துவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்ட அவர் கிளிநொச்சி கௌதாரிமுனை பிரதேசத்தில் இந்திய நிறுவனம் ஒன்றுக்கு காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்குரிய காணி வழங்குவது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர் யாருக்கும் அவ்வாறு காணிகள் வழங்கப்பட வில்லை எங்களை அபிவிருத்தி செய்வதற்கு நிதி வசதிகள் இல்லை வெளிநாடுகள் வரும்போது நாட்டிற்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் யார் வந்தாலும் அதனை நாங்கள் வரவேற்போம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.