நீர்கொழும்பு கிம்புலாபிட்டிய பிரதேசத்தில் இலகுரக விமானமொன்று இயந்திரக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறங்கியுள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
விமானத்தில் நான்கு பேர் இருந்ததாகவும், அவர்களில் இருவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தரையிறங்கும் போது விமானத்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.
சீகிரியாவில் இருந்து கொக்கல நோக்கி பயணித்த இலகுரக விமானம் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது திடீரென கிம்புலாபிட்டியவில் தரையிறக்கப்பட்டதாக கப்டன் தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1