27 C
Jaffna
January 22, 2025
Pagetamil
இலங்கை

புகையிரத நிலைய அதிபர்கள் இன்று காலை முதல் பணிப்புறக்கணிப்பு!

இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் இன்று காலை 10 மணி முதல் காலவரையற்ற தொழிற்சங்க போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது.

இன்று காலை அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக நள்ளிரவில் ஆரம்பிக்கப்படவிருந்த தொழிற்சங்க நடவடிக்கையை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளனர்.

சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன, போக்குவரத்து அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சரின் கோரிக்கைகளுக்கு அமைய இன்று காலை மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவித்தார்.

எவ்வாறாயினும் புகையிரத பயணச்சீட்டு வழங்குவதை இடைநிறுத்துவது மற்றும் பொதிகளை ஏற்று கொண்டு செல்வதை தவிர்ப்பது போன்ற தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என சோமரத்ன தெரிவித்தார்.

இலங்கை ரயில்வேக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு இலங்கை ரயில்வேயின் பொது முகாமையாளர் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இன்று நியாயமான தீர்வு வழங்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் தமக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இலங்கை தொடரூந்து பொது முகாமையாளருடன் இன்று காலை நடைபெறும் கலந்துரையாடலின் முடிவை பொறுத்து தமது தொழிற்சங்க நடவடிக்கையை தொடரவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பயணிகளைக் கருத்திற்கொண்டு தடையற்ற போக்குவரத்துச் சேவைகளை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த சோமரத்ன, எனினும் துரதிஷ்டவசமாக தீர்வுகள் வழங்கப்படாவிட்டால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைப் புறக்கணிக்க வேண்டியிருக்கும்.

பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுமாறு பொது முகாமையாளர் தொழிற்சங்கத்தை வற்புறுத்தமாட்டார் என தாங்கள் எதிர்பார்ப்பதாக தெரிவித்த அவர், அவ்வாறு இருந்தால் பொது முகாமையாளர் பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அரசியல் உள்நோக்கத்துடன் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்வதாக சில தரப்பினர் குற்றஞ்சாட்டி வருவதாக சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார். அத்தகைய கூற்றுகளை அவர் மறுத்தார்.

இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன மேலும் கூறுகையில், தொழிற்சங்கங்களின் கோரிக்கையை அதிகாரிகள் நிறைவேற்றத் தவறினால், அவர்களின் ஊழல் மோசடிகள் பலவற்றை வெளிப்படுத்தத் தயார் எனத் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

துணைவேந்தர் இல்லாத 4வது பல்கலைக்கழகமாகியது கிழக்கு பல்கலைக்கழகம்!

Pagetamil

முகநூல் மோசடி – சந்தேக நபர் கைது

east tamil

பாதுகாப்பு முறையில் புரட்சி – சிறைகளுக்கு விசேட அணிகள்

east tamil

பொது வளங்களை மக்கள் நலனுக்காக மாற்றும் முயற்சி

east tamil

இந்த விடயத்தில் ரணில், கோட்டா சிறப்பு: அனுர பாராட்டு!

Pagetamil

Leave a Comment