Pagetamil
இலங்கை

வவுனியாவில் விபத்து!

வவுனியா, மூன்றுமுறிப்பு பகுதியில் மின்சாரக் கம்பத்துடன் மோதி கார் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இன்று (26) பிற்பகல் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அனுராதபுரம் பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கிச் சென்ற கார் ஒன்று வவுனியா, மூன்றுமுறிப்பு பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது கட்டுப்பாட்டையிழந்து வீதி ஓரத்தில் காணப்பட்ட மின்சாரக் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த விபத்து காரணமாக மின்சாரக் கம்பம் உடைந்து விழுந்துள்ளதுடன், அப் பகுதியில் மின்சாரத் தடையும் ஏற்பட்டுள்ளது. குறித்த மின்சார கம்பத்தை சீர் செய்து மக்களுக்கு மின் வழங்கும் நடவடிக்கையை மின்சார சபையினர் முன்னெடுத்துள்ளனர். விபத்து குறித்த வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கச்சதீவு திருவிழா ஏற்பாட்டு கலந்துரையாடல்

Pagetamil

தத்தெடுத்த குழந்தை கொலை: தம்பதிக்கு மரணதண்டனை!

Pagetamil

சாணக்கியன் எழுப்பிய பாதுகாப்பு கவலைகள்!

Pagetamil

மேர்வினுக்கு விளக்கமறியல்

Pagetamil

ஆபிரிக்க காய்ச்சல் பரவிய வடக்கின் 5 பன்றிப்பண்ணைகள் மூடல்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!