அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், வெள்ளை சிறுபான்மையினரின் ஆட்சிக்கு எதிரான தென்னாப்பிரிக்காவின் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவருமான பேராயர் டெஸ்மண்ட் டுட்டு ஞாயிற்றுக்கிழமை தனது 90 வது வயதில் காலமானார் என்று தென்னாபிரிக்க ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
வன்முறையற்ற வழியில் இன ஒதுக்கலுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததற்காக அவருக்கு 1984ஆம் ஆண்டு அமைதிக்கான நொபெல் பரிசு வழங்கப்பட்டது.
இனரீதியாகப் பிளவுற்றுப்போன நாட்டில் சமரசம் ஏற்படுத்த அவர் பாடுபட்டார்.
1990களில் அவருக்கு Prostate எனப்படும் ஆண் சுரப்பிப் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.
புற்றுநோய் சிகிச்சை தொடர்பான தொற்றுகளுக்குச் சிகிச்சையளிக்க அண்மை ஆண்டுகளில் அவர் சிலமுறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
தென்னாபிரிகாவை விடுவித்த தலைமுறையைச் சேர்ந்த மேலும் ஒருவர் காலமானது வருத்தமளிப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி சிரில் ரமபோசா கூறினார்.
டுடுவின் மரணத்திற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.