இலங்கை உள்ளிட்ட நாடுகளை சுனாமி பேரலை தாக்கி இன்றுடன் 17 வருடங்கள் பூத்தியாகின்றன. சுனாமியினால் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து ஆத்மா சாந்தி வேண்டி மௌன அஞ்சலி நிகழ்வுகள் மட்டக்களப்பில் பல்வேறு இடங்களில் இடம்பெற்றன.
அந்த வகையில் மட்டக்களப்பு கடலூர் சந்திவெளி கடற்கரையில் நினைவுச் சுடர் ஏற்றியும் மலர் அஞ்சலி செலுத்தியும் இந் நிகழ்வுள் நடைபெற்றன.
கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாவு, கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் எஸ்.மணி ஆகியோர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு முதியோர்களுக்கு புத்தாடை வழங்கி அஞ்சலி செலுத்தினார்கள்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1