நுவரெலியாவிலிருந்து கண்டி நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று கட்டுப்பாடின்மையால் புஸ்ஸலாவ பகுதியில் நிறுத்தி வைத்திருந்த கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்ததோடு, பெண் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நுவரெலியா கண்டி பிரதான வீதியில் புஸ்ஸலாவ சரஸ்வதி மத்திய கல்லூரிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருடன் குறித்த முச்சக்கரவண்டி மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்து இன்று (26) காலை 9.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக புஸ்ஸலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ் விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்ததோடு, அதில் பயணித்த பெண் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 70 வயதுடைய டீ.எம்.ருபாநந்த என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவ் விபத்து தொடர்பில் புஸ்ஸலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொன்டு வருகின்றனர்.
–க.கிஷாந்தன்-