இன்றைய திகதியில் சமூக ஊடகங்களில் அன்னபூரணி அம்மாதான் ட்ரெண்டிங். எந்த பக்கம் திரும்பினாலும் நெட்டிசன்கள், அம்மாவை ‘வைச்சு செய்யு’ வரும் பதிவுகள்தான் காணப்படுகிறது.
சாமியார்களை பற்றி தமிழ் சினிமாக்களில் அடிக்கடி நகைச்சுவை காட்சிகள் இடம்பெறும். செய்யாத வேலையெல்லாம் செய்துவிட்டு, கடைசியில் சாமியாராகி, கல்லா கட்டும் காட்சிகள் அடிக்கடி இடம்பெறும்.
சினிமாவில் வரும் காட்சிகளை போலவே, அசல் சாமியாராகியுள்ளார் அன்னபூரணி அம்மா.
சில காலத்தின் கட்டிய புருசனை விட்டுவிட்டு, வேறொருத்தியின் புருசனுடன் ஓடிப்போன விவகாரத்தில், சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் தோன்றிய மகாலட்சுமிதான், இப்பொழுது அன்னபூரணி அம்மா என டுபாக்கூர் வேடமிட்டபடி வந்துள்ளார்.
கடந்த ஒரு வருடமாகவே, அன்னபூரணிக்குள் ‘அம்மன்’ இறங்கி விட்டதாம். அவர் யூரியுப்பில் வீடியோக்கள் பதிவிட்டு வந்தார். அப்போது, இந்த டுபாக்கூர் அம்மனை பற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை.
எனினும், தற்போது பேஸ்புக்கிற்குள் அம்மன் நுழைந்த பின், அவரை கழுவி ஊற்றி வருகிறார்கள்.
அன்னபூரணிக்கும் கல்லா கட்டும் வழிமுறை நன்றாகவே தெரிந்துள்ளது. ஆட்களை செட் பண்ணி, இரட்சித்ததாக வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களை குறிவைத்தும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அப்படி, இலங்கையிலிருந்து ஒருவர் பேசுவதாக, முழுக்க முழுக்க இந்திய உச்சரிப்பில் இளைஞன் ஒருவர் பேசும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
வீடியோவை காண இங்கு அழுத்துங்கள்