மாணவிகளுக்கு பாலியல் தொல்லை புகார்: அரசுப்பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

Date:

நெய்க்காரப்பட்டி அருகே கே.வேலூரில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் அங்கு இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வரும் அகமது ரபி (56) என்பவர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அநாகரிமாக திட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த மாணவிகளின் பெற்றோர் தரப்பில் வட்டார கல்வி அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில் பாலியல் தொல்லை தொடர்பாக மாணவிகளின் பெற்றோர் தரப்பில் பழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் அகமது ரபியை கைது செய்தனர்.

spot_imgspot_img

More like this
Related

முதல் முறையாக நாடொன்றின் மீது இனப்படுகொலை நடத்தியதாக தீர்ப்பு: சர்வதேச நீதிமன்றம் வழங்கியது!

மியான்மர் தனது ரோஹிங்கியா சிறுபான்மையினருக்கு எதிராக இனப்படுகொலை செய்துள்ளது என்று சர்வதேச...

நீதிமன்றில் சாட்சியமளிக்க சென்ற செயற்பாட்டாளர் மீது கொலைவெறித் தாக்குதல்: யாழில் பயங்கரம்!

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் கொலை வழக்கொன்றில் சாட்சியமளிக்க சென்ற அரசியல் செயற்பாட்டாளரும்,...

16 வயதைத் திருமணத்திற்கான விருப்பத்தெரிவாக மாற்ற வேண்டும்; இலங்கை உலமா கட்சி கோரிக்கை!

நக்கிள்ஸ் சம்பவத்துடன் தொடர்புடைய 15 வயது சிறுமியின் நலன்புரி மற்றும் தொடர்ச்சியான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்