முல்லைத்தீவு சிறுமி நிதர்சனாவின் பெற்றோர், சகோதரி கைது!

Date:

முல்லைத்தீவு மாவட்டத்தின், மூங்கிலாறு வடக்கில் கருக்கலைப்பின் போது உயிரிழந்த 12 வயது சிறுமி நிதர்சனாவின் பெற்றோர், சகோதரி கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த இவர்கள், இன்று பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 15ஆம் திகதி காணாமல் போனதாக தாயாரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், 18ஆம் திகதி சிறுமி நிதர்சனா சடலமாக மீட்கப்பட்டார்.

அவரது பிரேத பரிசோதனையில், 2 மாத கர்ப்பமாக இருந்தமை உறுதியானது.

சிறுமி நிதர்சனாவின் 20 வயதான மூத்த சகோதரியை 3வது தாரமாக திருமணம் செய்திருந்த 34 வயதான அத்தானே, நிதர்சனாவை துஷ்பிரயோகம் செய்தார் என்ற சந்தேகத்தில் கைதாகினார்.

தாய், தந்தை, மூத்த சகோதரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

அத்தானால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கர்ப்பமான நிதர்சனாவிற்கு, தாயாரே கருக்கலைப்பு செய்ய முயன்றார், சிறுமியை மயக்கமடைய வைக்க ஒரு வகை மருந்தை பாவித்தார் என தந்தை ஒப்புதல் வாக்குமூலமளித்திருந்தார்.

இந்த நிலையில், தாய், தந்தை, சகோதரி இன்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்கள்.

spot_imgspot_img

More like this
Related

திருடச் சென்ற வீட்டில் குறட்டை விட்டு தூங்கிய திருடன்

ரத்தனபிட்டிய பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்த திருடன் ஒருவன், உள்ளே...

ஹோர்முஸைத் திறக்கும் திட்டம் குறித்து அமெரிக்காவின் பதில் செவ்வாய்க்கிழமை வரும் – ஈரான் வெளியுறவு அமைச்சர்

ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பது குறித்த தெஹ்ரானின் முன்மொழிவுக்கு, அமெரிக்காவிடமிருந்து செவ்வாய்க்கிழமையன்று அதிகாரப்பூர்வமான...

அரச வாகனத்தை பயன்படுத்திய வழக்கில் முன்னாள் அமைச்சர் பௌசிக்கு ரூ.66 இலட்சம் அபராதம்!

அனர்த்த முகாமைத்துவ அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், நெதர்லாந்து அரசாங்கத்தால் அனர்த்த முகாமைத்துவ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்