பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பூண்டுலோயாவில் போராட்டம்

Date:

வாழ்க்கை சுமை மற்றும் எரிபொருள் விலை, அத்தியவசிய பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பூண்டுலோயா நகரில் இன்று (24) போராட்டம் நடைபெற்றது.

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) கொத்மலை பிரதேச சபை உறுப்பினர் கபில பண்டார தலைமையில் நடைபெற்ற இப்போராட்டம் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

“வாழ்க்கைச்சுமை அதிகரித்துள்ளதால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிவாரணம் வழங்கவேண்டிய அரசாங்கம், மாறாக பொருட்களின் விலைகளை அதிகரித்து வருகின்றது. இதனை எம்மால் ஏற்கமுடியாது. ஆகவே, பொருட்கள், சேவைகளின் விலைகள் உடன் குறைக்கப்பட வேண்டும்.” என்று போராட்டக்காரர்கள் கோஷமெழுப்பினர்.

பூண்டுலோயா நகரில் உள்ள மைதானத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பிக்கப்பட்டு நகரின் ஊடாக பூண்டுலோயா பஸ் தரிப்பிடம் வரை சென்று அங்கு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

–க.கிஷாந்தன்-

spot_imgspot_img

More like this
Related

கண்டி இராச்சியத்தின் துப்பாக்கிகளை மீள கையளிக்க நெதர்லாந்து முடிவு

ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் கண்டி இராஜ்ஜியத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட இலங்கைக்கு உரித்தான...

யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக ஒஷான் ஹேவா விதாரண கடமையேற்பு

யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய பிரதி பொலிஸ் மா அதிபராக ஒஷான் ஹேவா...

யாழில் கணவனை கொன்ற மனைவிக்கு மரணதண்டனை

யாழ்ப்பாணம் - அரியாலை, பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்