நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் நாட்டை அழித்த குழுவுடன் கூட்டு சேர்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இல்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்ற விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பொன்சேகா, எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. கூட்டணியின் வெற்றி மற்றும் பயணத்தை பொதுமக்கள் தீர்மானிப்பார்கள் என தெரிவித்தார்.
எனினும் நாட்டை அழித்த நபர்களுடன் மேடை ஏறுவதற்கு வெட்கப்படுகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.
யாருடன் இணைந்து அரசியல் பயணத்தை முன்னெடுக்க முடியும் மற்றும் முடியாது என்பதை அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என பீல்ட் மார்ஷல் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிடும் திட்டம் உள்ளதா என ஊடகவியலாளர்கள் வினவியபோது, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் தோல்வியடைந்துள்ளதால் அவர் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என எம்.பி.பொன்சேகா தெரிவித்தார்.
ஊழல் விவகாரம் மட்டும் முக்கியமல்ல, திறமை, அர்ப்பணிப்பு, சொன்னதைக் கடைப்பிடிப்பது போன்றவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.




