கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய ரௌடிகள், வீட்டில் நின்ற மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்று, நடுவீதியில் உடைத்துள்ளனர்.
இன்று (23) அதிகாலை இந்த சம்பவம் நடந்தது.
கோண்டாவிலில் உள்ள இளைஞர் ஒருவரின் வீட்டிற்குள் புகுந்த ரௌடிகள், வீட்டு யன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்துள்ளனர்.
அத்துடன், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தாவடி பகுதிக்கு உருட்டிச் சென்று, நடுவீதியில் போட்டு, உடைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிசார் விசாரணைகளை நடத்தி வருகிறார்கள்.





