பிரிட்டனில் முதல்முறையாக ஒரே நாளில் 100,000க்கும் அதிகமான COVID-19 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
ஒரேநாளில் அங்கு 106,122 பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.நாளொன்றில் 140 இறப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த ஏழு நாட்களில் 30% தொற்று அதிகரித்துள்ளது.
அதிவேகமாகப் பரவும் ஓமைக்ரோன் பிறழ்வால் அங்கு நிலைமை மோசமடைந்துள்ளது.
தொற்று அதிகரித்து வரும் நிலையிலும், கிறிஸ்மஸுக்கு முன் பிரிட்டனில் மேலும் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த மாட்டேன் என்று பிரதமர் பொரிஸ் ஜோன்சன் உறுதியளித்தார், இருப்பினும் டிசம்பர் 25 க்குப் பிறகு கூடுதல் நடவடிக்கைகளை நிராகரிக்க மறுத்துவிட்டார்.
நோய்வாய்ப்பட்ட ஊழியர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டியிருப்பதால் பல தொழிற்சாலைகள் ஆள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து இரண்டு நாளுக்குப் பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதியானால் தனிமைப்படுத்திக்கொள்ளும் காலம் 10லிருந்து 7 நாளுக்குக் குறைக்கப்படும் எனப் பிரிட்டிஷ் அரசாங்கம் தெரிவித்தது.
இதுவரை அங்கு 18 பேர் ஓமைக்ரோன் தொற்றால் மரணித்துள்ளனர்.




