அமெரிக்க சுகாதார கட்டுப்பாட்டாளர்கள், கோவிட்-19க்கு எதிரான முதல் வாய்வழி மாத்திரையை அங்கீகரித்துள்ளனர். ஃபைசர் நிறுவத்தின் மாத்திரைக்கே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் மோசமான விளைவுகளைத் தடுக்க பயனர்கள் வீட்டிலேயே இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ள முடியும்.
அந்த முடிவைப் பாராட்டிய ஜனாதிபதி ஜோ பைடன், இந்த மாத்திரை, நோயாளிகள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதையும் மரணங்களையும் குறைக்க உதவும் என்றார்.
அடுத்த மாதம் 250,000 முறை உட்கொள்வதற்குத் தேவையான மாத்திரைகள் பெறப்படும் என்று பைடன் தெரிவித்துள்ளார்.
ஃபைசர் மாத்திரைக்கு அனுமதியளிக்கும் முடிவை, நேற்று புதன்கிழமை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம்அறிவித்தது.
ஃபைசரின் மருத்துவ பரிசோதனையின் தரவு, கடுமையான நோயின் அதிக ஆபத்தில் உள்ள நோயாளிகளை மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் மற்றும் இறப்புகளைத் தடுப்பதில் 90 சதவீதம் பயனுள்ளதாக இருந்தது என்பதைக் காட்டுகிறது. சமீபத்திய ஆய்வகத் தரவு, ஒமைக்ரோனிற்கு எதிராக மருந்து அதன் செயல்திறனைத் தக்கவைத்துக்கொள்வதாகக் கூறுகிறது.




