ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினியை பரோலில் விடுவிக்க வேண்டும் என்று அவரது தாயார் பத்மா, முதல்வர் தனிப் பிரிவில் மனு அளித்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
வயது மூப்பின் காரணமாக உடல் மற்றும் உளவியல் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறேன். என் இறுதி காலத்திலாவது மகள் நளினி என்னுடன் வாழ ஏங்குகிறேன். நளினி, 31 ஆண்டுகள் சிறைவாசத்தால் மன அழுத்தம், உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வருகிறார். எனவே,மனிதநேய அடிப்படையில் அவருக்கு பரோல் வழங்க வேண்டும். 7 பேர்விடுதலையில் ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக அறிந்தேன். அதன்படி ஆளுநரிடம் தாங்கள் நினைவூட்டி விடுதலைக்கு ஆவன செய்ய கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1