கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி உலகமெங்கும் மக்கள் விடுமுறைக்கு திட்டமிட்டு வருகிற தருணத்தில் அவற்றை இரத்து செய்து விடுமாறு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வாழ்க்கையே இரத்தாகி விடுவதைவிட ஒரு நிகழ்வுஈரத்து செய்யப்படுவது சிறந்தது. இப்போது கொண்டாடி பின்னர் வருத்தப்படுவதை விட, இப்போது (கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்தை)ஈரத்து செய்துவிட்டு பின்னர் கொண்டாடலாம். 2022ஆம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்றை முடிவுக்கு கொண்டு வருவோம்” என கூறினார்.
“டெல்டாவை விட ஒமைக்ரோன் குறிப்பிடத்தக்க அளவில் கணிசமாக பரவுகிறது என்பதற்கு சான்றுகள் உள்ளன. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மற்றும் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் மீண்டும் தொற்றுக்கு ஆளாகலாம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.