சீன உரக் கப்பலுக்கு நட்டஈடு வழங்கப்படாவிட்டால் நாட்டுக்கு பாரிய இழப்பு ஏற்படும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பெர்னாண்டோ, சீனா போன்ற சக்தி வாய்ந்த நாட்டை புண்படுத்துவது நல்லதல்ல என்றார்.
6 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்காக மற்றொரு நாட்டைப் புண்படுத்துவதை விட, கடன் கடிதத்தின் விதிமுறைகளின்படி சட்டப்பூர்வமாக சிக்கல்களைத் தீர்க்க முயற்சிக்க வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.
இதுபோன்ற பிரச்சினைகளை நாடுகள் இணக்கமான முறையில் தீர்க்க வேண்டும் என்றார்.
இலங்கைக்கு தேவையிருந்த போது சீனா 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியளித்ததாக அமைச்சர் பெர்னாண்டோ தெரிவித்தார்.
யுகதனவி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தத்தினால் நாட்டுக்கு எவ்வித நட்டமும் ஏற்படாது என அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த ஒப்பந்தம் நாட்டின் மின்சாரக் கட்டணத்தை குறைக்க வழிவகுக்கும். ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை 30 முதல் 50 சதவீதம் வரை குறையும் என்று அவர் கூறினார்.
தெற்காசியப் பிராந்தியத்தில் இலங்கையில் அதிகளவு மின்சாரக் கட்டணம் இருப்பதாகத் தெரிவித்த அமைச்சர் பெர்னாண்டோ, கட்டணக் குறைப்பை யார் விரும்பமாட்டார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.
யுகதனவி ஒப்பந்தம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க வெளியிட்ட அறிக்கைகள் பொய்யானவை என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் தேர்தலை ஒத்திவைக்கும் வகையில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர்கள் வினவியபோது, அவ்வாறான அமைச்சரவைப் பத்திரம் தொடர்பில் தனக்குத் தெரியாது என அமைச்சர் குறிப்பிட்டார். .