திருகோணமலை- நொச்சிக்குளம் ஜின்னாநகர் பகுதியில் வயலுக்குள் மாடு சென்றதாக குறிப்பிட்டு, மாட்டு உரிமையாளரான பெண் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று (14)மாலை இடம்பெற்றுள்ளது.
நொச்சிகுளம் ஜின்னாநகர் பகுதியில் வயலுக்குள் மாடு சென்று வேளாண்மையை உட்கொண்டதாக தெரிவித்து தன்னை தாக்கியதாக அதே பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண்ணொருவர் மொரவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
திருகோணமலை-ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த வயல் உரிமையாளரான அபூபக்கர் ரபீக் என்பவரே தன்னை தாக்கியதாக தெரிவித்துள்ளார்.
இத்தாக்குதலில் காயமடைந்த பெண் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
தாக்குதல் தொடர்பில் மொரவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1