25.4 C
Jaffna
January 18, 2025
Pagetamil
மலையகம்

கினிகத்தேனையில் டீசல் கொள்கலன் கவிழ்ந்தது!

அட்டன் – கொழும்பு பிரதான வீதியில் டீசல் கொள்கலன் ஒன்று இன்று (13) மாலை 5.00 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொழும்பு முத்துராஜவெல பகுதியிலிருந்து கொட்டகலையிலுள்ள பெற்றோலிய களஞ்சியசாலைக்கு டீசலை கொண்டு செல்லும் போதே கட்டுப்பாட்டை இழந்த குறித்த பவுஸர் அட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை மெலிபன் தொழிற்சாலைக்கு அருகாமையில் பிரதான வீதியில் விலகி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் பவுஸரில் இருந்த டீசல் வெளியேறி வீதியில் பரவியுள்ளது. இவ் விபத்தினால் சில மணி நேரம் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்தில் சாரதியும், உதவியாளரும் படுகாயம்பட்டு நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பவுஸரில் 33,000 லீட்டர் டீசல் இருந்ததாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.

-க.கிஷாந்தன்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

east tamil

விபத்தில் இரு மாணவர்கள் பலி

east tamil

4 வயது குழந்தையுடன் நீர்த்தேக்கத்தில் குதித்த தாய்

Pagetamil

Update – டிக்கோயா ஆரம்ப பாடசாலை மாணவர்கள் 50 பேர் வைத்தியசாலையில் அனுமதி

east tamil

பிரவாசி பாரதிய திவாஸ்: இந்தியத் தலைவர்களை சந்தித்த செந்தில் தொண்டமான்

east tamil

Leave a Comment