Pagetamil
இலங்கை

இலங்கையில் மீட்கப்பட்ட உலகின் மிகப்பெரிய நீல இரத்தினக்கல்: மேலதிக தகவல்கள்!

உலகிலேயே மிகப் பெரிய நீல இரத்தினக்கல் (star sapphire cluster) இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆசியாவின் ராணியென பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த இரத்தினக்கல் 310 கிலோகிராம் நிறையுடையது. இந்த 1,550,000 கரட்டாகும் என தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகார சபை தெரிவிக்கின்றது.

இரத்தினபுரி – பட்டுகெதர பகுதியில் மூன்று மாதங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட 310 கிலோ எடையுள்ள இந்த நீல இரத்தினமே, உலகின் இயற்கையான மிகப்பெரிய நீல இரத்தினகொத்து என தெரிவிக்கப்படுகிறது.

நீலக்கல்லை ஆய்வு செய்த உள்ளூர் இரத்தினவியல் வல்லுநர்கள், இது 300 கிலோவுக்கும் அதிகமான எடையைக் கொண்டிருப்பதால், இது உலகின் அரிதான ரத்தினங்களில் ஒன்றாகும் என்று தெரிவித்தனர். சர்வதேச நிறுவனங்கள் இன்னும் விலைமதிப்பற்ற கல்லுக்கு சான்றளிக்கவில்லை.

கொழும்பில் இருந்து 65 கிலோமீற்றர் தெற்கே ஹொரணையில் உள்ள இரத்தினக்கல் குழி உரிமையாளர் ஒருவரின் வீட்டில் இந்த நீலக்கல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. பௌத்த துறவிகள் குழு ஒன்று ரத்தினக் கல்லை திறந்து வைப்பதற்கு முன்பு ஆசிர்வாதம் செய்தனர்.

கடந்த ஆண்டு இரத்தினங்கள், வைரங்கள் மற்றும் பிற நகைகள் ஏற்றுமதி மூலம் இலங்கை சுமார் அரை பில்லியன் டொலர்களை சம்பாதித்துள்ளது என்று உள்ளூர் இரத்தினங்கள் மற்றும் நகை தொழில் அமைப்பு தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
2
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

டக்ளசின் வாகனத்தில் ஐஸ் போதைப்பொருள்: உதவியாளர் கைது

east tamil

நிதி சிக்கலுக்குப் பின் துறைமுக புதைகுழி அகழ்வு மீண்டும் ஆரம்பம்

east tamil

கடந்த ஆண்டில் சிறுவர்கள் தொடர்பாக 8746 முறைப்பாடுகள் பதிவு – சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை

east tamil

பண்டத்தரிப்பில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா

east tamil

Update – மாவை. சேனாதிராஜா அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

east tamil

Leave a Comment