தமிழ் பேசும் சிறுபான்மையின கட்சிகளிற்கிடையிலான இரண்டாவது சந்திப்பு நாளை (12) கொழும்பில் இடம்பெறவுள்ளது.
தமிழ் பேசும் சிறுபான்மையின கட்சிகளின் தலைவர்கள் அண்மையில் யாழ்ப்பாணத்தில் சந்தித்து பேசியிருந்தனர்.
இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் அங்கத்துவ கட்சிகள் கலந்து கொண்டிருந்தன.
இலங்கை தமிழ் அரசு கட்சியும், அகில இலங்கை தமிழ் காங்கிரசும் கூட்டத்தை புறக்கணித்திருந்தன.
அடுத்த கூட்டத்தை கொழும்பில் நடத்துவதென, இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி, நாளை பம்பலப்பிட்டியிலுள்ள விடுதியொன்றில் கூட்டத்தை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தை தலைமை தாங்கி நடத்தும்படி, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கோரும் கடிதத்தை ஏற்பாட்டாளர்கள் நேற்று கையளித்தனர். நாளைய கூட்டத்தில் கலந்து கொள்வதாக இரா.சம்பந்தன் வாக்குறுதியளித்துள்ளார்.
நாளை காலை 11 மணிக்கு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.